#மலேசியா- மீட்கப்பட்ட தமிழர்கள்

#மலேசியாவில்  இருந்து  மீட்கப்பட்ட  17  தமிழர்கள் #சென்னை_வந்தடைந்தனர் தமிழக வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு மலேசிய நாட்டில் கொடுமைக ளை அனுபவித்த தமிழர்களை #தமிழக_சேவை_குழு_மலேசியா #மக்கள்_பாதை_மலேசியா #அயலகம் திட்டத்தின் கீழ் மலேசியாவில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களோடு…. மக்கள் பாதையின் மாநில பொருப்பாளர் திரு.இளங்கோவன் விவரிக்கிறார்.    

#நாமக்கல் – பார்வையற்ற சகோதரிக்கு உதவி

பார்வையற்ற சகோதரி உமாராணிக்காக பெறப்பட்ட நன் கொடை தொகை ரூ.50,000 அவரிடமே வழங்கப்பட்டது, அனைவரின் வேண்டுதல்களாலும் நல்லுள்ளம் கொண்டவர்களின் உதவியாலும் சகோதரி விரைவாக வீடு திரும்பியுள்ளார். நிதி உதிவி அளித்த அனைவருக்கும் மக்கள் பாதை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் *ஊர் : நாமக்கல்* *சுதந்திரப் போராட்ட தியாகி தர்மலிங்கம் அவர்களின் மகள்* ஏழு ஏக்கர் நிலத்தை நாட்டுக்காக அர்பணித்த தியாகியின் மகளை காக்க உதவும் நோக்கில். *குடும்ப சூழல்* Continue Reading

#காஞ்சிபுரம் – பனைவிதை நடும் நிகழ்வு

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் லத்தூர் ஊராட்சி பெரும்பாக்கம் கிராமத்தில் நீர் நிலையை சுற்றி பனைவிதை நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை ஒருங்கிணைத்த லத்தூர் ஊராட்சியின் திட்ட பொறுப்பாளர் திரு மதன் அவர்களுக்கும் கலந்து கொண்டு களப்பணி ஆற்றிய மக்கள் பாதை தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி.

#திருவாரூர் – மரக்கன்று நடுதல் நிகழ்வு

#திருவாரூர் மாவட்டம் சார்பாக இன்று (3/12/17) “தாய்மண்” திட்டத்தின்படி நடைபெற்ற மரக்கன்று நடுதல் நிகழ்வு #நன்னிலம்_கம்மங்குடி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 20 மரக்கன்றுகள் நடப்பட்டது. (மா-5; பலா-5; கொய்யா-5; பெருங்கனி-5; ) மோகன்தாஸ்.கபி 9942591851 மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திருவாரூர்

#வேலூர் – அறிவு திறன் போட்டி

#அரசுப்பள்ளியில்_அறிவு_திறன்_போட்டி #வேலூர்_மாவட்டம் #100_மாணவர்கள்_பங்கேற்பு திருப்பத்தூர்-பொம்மிக்குப்பம் அரசு உயர்நிலை பள்ளியில் திண்ணை பள்ளி ஆசிரியை மேகலா தலைமையில் டிசம்பர் 3ஆம் தேதி மாணவர்களுக்கு அறிவு திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட திண்ணை திட்ட பொறுப்பாளர் திரு.கோபி அவர்கள் துவக்கி வைத்தார் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன பங்கு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் சுமார் 100 மாணவர்கள் பங்குப்பெற்றனர் பரிசுகளை பேராசிரியை சுபாஷினி மற்றும் சுதந்திர போராட்ட தியாகி Continue Reading

#நாமக்கல் – சிலம்பாட்டத்தில் பரிசு

03/12/2017 அன்று ஒசூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் நாமக்கல் மக்கள்பாதை பயிற்சிபள்ளி வீர,வீராங்கணைகள் குழு கலந்து கொண்டு மாநில அளவில் ஆறுதல் பரிசு பெற்றனர்,.. இன்று (04/12/2017) மாலை 6 மணிக்கு நம் மாணவர்களுக்கு பரிசளிப்புவிழா நம் நாமக்கல் மக்கள்பாதை அலுவலகத்தில் நடைபெற்றது,. அதில் அனைவருக்கும் மாநில குழு போட்டிக்கான சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் பேனாபெட்டிகள் வழங்கப்பட்டது,. மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,. மேலும் Continue Reading

#காஞ்சிபுரம் – பறை இசை பயிற்சி!

காஞ்சிபுரம் மாவட்ட பறை (பறைசாற்றுதல்) இசை பயிற்சி கூடுவாஞ்சேரியில், 10-12-2017 அன்று கூத்து திட்டத்தின் பகுதியாக முழு நாள் பறை இசை பயிற்சி எங்களது அன்பிற்குரிய ஆசான் திரு.நெல்லை மணிகண்டன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டது. அடுத்த வாரம் நம் பறை இசை வாயிலாக முதல் விழிப்புணர்வு பரப்புரை நடத்தவுள்ளோம். நன்றி. காஞ்சிபுரம் மக்கள் பாதை.