சென்னையில் கைத்தறி ஆடையகம்

சென்னையில் கைத்தறி ஆடையகம் திறந்து வைத்தார் திரு. சகாயம் IAS. கைத்தறி நேரடி கொள்முதலில் மக்கள் பாதையின் முதல் முயற்சி… நெசவாளர்களுக்காக முதல் விற்பனை நிலையம்… வருமானம் அனைத்தும் நேசவாளர்களிடம் சேரும்…. சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை #makkalpathai #Sagayam_IAS

கலை

அழிந்து போன பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கவும் அழிந்துவரும் கலைகளுக்கு புத்துணர்வு தந்து புதுப்பிக்கவும் எண்ணிலடங்கா கற்பனைகளை கலையில் புகுத்திவரும் கலைஞர்களை ஊக்குவிக்கவும், அனைவரும் கலையை பயின்று மற்றவருக்கும் பயிற்றுவிக்கவும் தோற்றுவிக்கப்பட்ட திட்டமே கலை. தமிழகமெங்கும் பாரம்பரியக் கலைக் குழுவினரை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவதும், புதிய கலை ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதும் தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். உங்கள் ஊரிலோ, நகரிலோ திறமையான வீரர்கள் இருக்கிறார்களா ? நீங்கள் ஒரு பயிற்சியாளரா ? அப்படியென்றால் தொடர்பு கொள்ளுங்கள்! திரு. பாலா – 98404 25464

திடல்

இன்றைய சமூகத்தில் இளைஞர்களும் மாணவர்களும் வலைதளத்திலும் ,மது போதையிலும் மூழ்கி நேரத்தையும் உடலையும் வீணாக்கி கொண்டிருக்கின்றனர். ஆகையால் வீணாய் நேரத்தை கழிக்கும் இவர்களை விளையாட்டு திடலில் நேரத்தை கழிக்கவும், திடலில் தடம்பதித்து சாதனைகள் பல படைக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டமே திடல். திறமையானவர்களை கண்டறிந்து, அவரக்ளுக்கு ஊக்கமளித்து நல்ல பயிற்சியும் கொடுத்து தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபெற செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். நமது மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்த விழுப்புரம் அந்தோணியம்மாள், சர்வதேச கடற்கரை கபடி (மகளிர் ) போட்டியில் இந்திய அணி சார்பில் 19-03-2017 அன்று தங்கம் வென்றுள்ளார். மக்கள் பாதையின் சிலம்பம் பயிற்சி மூலம் இலத்துவாடி( நாமக்கல்) அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வு! உங்கள் ஊரிலோ, நகரிலோ திறமையான வீரர்கள் இருக்கிறார்களா ? நீங்கள் ஒரு பயிற்சியாளரா ? அப்படியென்றால் தொடர்பு கொள்ளுங்கள்! திரு. கல்யாண் – 98413 55557

உழவன்_அங்காடி_பற்றி_திரு_சகாயம்_IAS

#உழவன்_அங்காடி_பற்றி_திரு_சகாயம்_IAS #சென்னை நேரடிக் கொள்முதல்! பகுதி நேர விற்பனை! வருமானத்தை உழவர்களிடம் ஒப்படைத்தல்! பகுதி நேர விற்பனை செய்ய தன்னார்வலர்கள் தொடர்புக் கொள்ளவும்… #சென்னையில் மக்கள் பாதையின் தற்போதிய உழவன் அங்காடிகள்… 1) #அண்ணா_நகர் டவர் பூங்கா, 6 வது பிரதான சாலை 94451 61751 2) #அண்ணா_நகர் போகன்வில்லா பூங்கா, 6 வது நிழற்சாலை, K4 காவல் நிலையம் எதிரில். 94451 61751 3) #பெரம்பூர் சந்திர யோகி சமாதி வீதி, ஏகாஞ்சிபுரம் 98844 75461 4) #அஷோக்_நகர் 11 வது நிழற்சாலை, கிரான்ட் ஸ்வீட்ஸ் எதிரில் 90944 72670 5) #K_K_நகர் சிவன் பூங்கா 88388 73624 ஏழை விவசாயிகளின் வாழ்வு மேம்பட ஒரு சிறு துரும்பாக இருப்போம்..