கலை

அழிந்து போன பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கவும் அழிந்துவரும் கலைகளுக்கு புத்துணர்வு தந்து புதுப்பிக்கவும் எண்ணிலடங்கா கற்பனைகளை கலையில் புகுத்திவரும் கலைஞர்களை ஊக்குவிக்கவும், அனைவரும் கலையை பயின்று மற்றவருக்கும் பயிற்றுவிக்கவும் தோற்றுவிக்கப்பட்ட திட்டமே கலை. தமிழகமெங்கும் பாரம்பரியக் கலைக் குழுவினரை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவதும், புதிய கலை ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதும் தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். உங்கள் ஊரிலோ, நகரிலோ திறமையான வீரர்கள் இருக்கிறார்களா ? நீங்கள் ஒரு பயிற்சியாளரா ? அப்படியென்றால் தொடர்பு கொள்ளுங்கள்! திரு. பாலா – 98404 25464

திடல்

இன்றைய சமூகத்தில் இளைஞர்களும் மாணவர்களும் வலைதளத்திலும் ,மது போதையிலும் மூழ்கி நேரத்தையும் உடலையும் வீணாக்கி கொண்டிருக்கின்றனர். ஆகையால் வீணாய் நேரத்தை கழிக்கும் இவர்களை விளையாட்டு திடலில் நேரத்தை கழிக்கவும், திடலில் தடம்பதித்து சாதனைகள் பல படைக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டமே திடல். திறமையானவர்களை கண்டறிந்து, அவரக்ளுக்கு ஊக்கமளித்து நல்ல பயிற்சியும் கொடுத்து தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்குபெற செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். நமது மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்த விழுப்புரம் அந்தோணியம்மாள், சர்வதேச கடற்கரை கபடி (மகளிர் ) போட்டியில் இந்திய அணி சார்பில் 19-03-2017 அன்று தங்கம் வென்றுள்ளார். மக்கள் பாதையின் சிலம்பம் பயிற்சி மூலம் இலத்துவாடி( நாமக்கல்) அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வு! உங்கள் ஊரிலோ, நகரிலோ திறமையான வீரர்கள் இருக்கிறார்களா ? நீங்கள் ஒரு பயிற்சியாளரா ? அப்படியென்றால் தொடர்பு கொள்ளுங்கள்! திரு. கல்யாண் – 98413 55557

கைத்தறி

தன் குடும்பப் பசியைப் போக்க நாள் முழுவதும் பட்டினியோடு குறைந்தபட்ச கூலிக்காக குடும்பமே கடினமாய் உழைத்தும் தன் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த முடியாமல் தவிக்கிறான் கைத்தறி நெசவாளி. அந்த நெசவாளர்களின் வாழ்வு மேம்பட அவர்களின் இருள் சூழ்ந்த வாழ்க்கையில் ஒளியேற்ற, கைத்தறி ஆடைகளை நாமே அவர்களிடம் நேரடியாகக் கொள்முதல் செய்துவருகிறோம். விற்பனையில் வரும் லாபத்தை நெசவாளர்களிடமே ஒப்படைத்து அவர்களின் வாழ்க்கை மேம்பட ஆரம்பிக்கப்பட்ட அற்புதத் திட்டமே கைத்தறி. விசைத்தறியில் உருவாக்கப்பட்ட துணி புகைப்படக் கருவியில் எடுக்கப்பட்ட படம் போல, ஆனால் கைத்தறியில் நெய்யப்பட்ட துணியோ கற்பனையில் வரைந்த ஓவியம் ஆகும். நெசவாளர்களின் இன்றைய நிலை குறித்து திரு. சகாயம் IAS அவர்களின் கருத்து. இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, பொறுப்பாளர் கூறுகையில். இந்த விற்பனை மூலம் கிடைத்து வரும் வருவாயை பயனாளிகளுக்கு, நேரடியாக கொண்டு சேர்த்தும் வருகிறோம். இதுவரை சுமார் 5000 கைத்தறி ஆடைகளைத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்துள்ளோம். வருவாயை பயனாளிகளுக்கு, நேரடியாக கொண்டு சேர்த்தும் வருகிறோம். கொள்முதல் செய்த ஆடைகள்: சேலை, வேட்டி, துண்டு, போர்வை, கைலி. இந்த விற்பனை மூலம் கிடைத்து வரும் வருவாயை பயனாளிகளுக்கு, நேரடியாக கொண்டு சேர்த்தும் வருகிறோம். கைத்தறி ஆடைகள் வாங்கி ஏழை நெசவாளர்களுக்கு உதவ தொடர்பு கொள்ளவும், திரு. சண்முகம் – 99622 87307

மக்கள் மருந்தகம்

மக்களை அழிக்கும் மது, மலிவாக கிடைக்கும் இத்தேசத்தில், மக்களைக் காக்கும் மருந்துகள் மலிவாக கிடைப்பதில்லை. ஏழையின் எட்டாக் கனிகளில் தரமான மருந்துகளும் அடக்கம். எனவே, அனைத்து உயர்தர மருந்துகளையும் குறைந்த விலையில் வழங்கி ஏழைகளின் உயிர் காக்க உருவாக்கப்பட்டதே மக்கள் மருந்தகம். ஜெனிரிக் மெடிசின் (Generic Medicine) என்றால் என்ன ? சிவகங்கையில் மக்கள் மருந்தகம்: தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் மருந்துக் கடைகள்: வ.எண் இடம் தொடர்புக்கு 1. சிவகங்கை 9788052839, 04575240007 2. கன்னியாகுமரி 8903114050 3. திருச்சி 8903600862 4. கோவை 9842263302 5. வேலூர் 8098888844 புதிதாக கடை திறக்கப்பட உள்ள இடங்கள்: வ.எண் இடம் தொடர்புக்கு 1. பெரம்பலூர் 9994567301 2. தூத்துக்குடி 8015915499, 04639281084 3. திண்டுக்கல் 9842143750 4. காஞ்சிபுரம் 9445230330 5. சிவகங்கை காளையார்கோவில் 9786830662 6. சிவகங்கை மானாமதுரை 9043188480 7. ராமநாதபுரம் கீழக்கரை 9791742074 8. ராமநாதபுரம் ஏர்வாடி 9943942097 9. ராமநாதபுரம் கடலடி 7200548348 10. சேலம் 9600455443 11. நாமக்கல் 9043000044 தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள மருந்தகங்கள்: Click here மருந்து வாங்குவதற்கான வழிமுறைகள் : 1. நேரிடையாக வாங்குதல். மருந்து அட்டையின் தெளிவாக புகைப்படம்(இரு புறங்களும்) , மருத்துவரின் மருந்து சீட்டு ஆகியவற்றை வாட்சப்( 9788052839) அல்லது மின்னஞ்சல் (svgjanaushadhi@gmail.com) அனுப்புதல் . 2. வங்கி கணக்கில் பணம் செலுத்திய பிறகு மருந்தை கொரியர் மூலம் பெறுதல். 3. பணம் செலுத்தும் முறை: Online Net banking, வங்கி மற்றும் அஞ்சலகத்தில் செலுத்துதல், காசோலை(Cheque) அனுப்புதல், BHIM APP மூலம் செலுத்துதல். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் “மக்கள் மருந்தகம்” துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு: தொடர்புக்கு மாவட்டம் திரு. ரவி 9087868796 காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி. திரு. காளீஸ்வரன் 8608601443 மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை. திரு. ஜீவா 9965152053 ஈரோடு, Continue Reading

திண்ணை

கிராமப்புறங்களில் படிக்கும் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்யும் வகையில் தமிழ் மொழியின் சிறப்பு, சமூகச் சிந்தனைகள், அடிப்படை ஆங்கிலக் கல்வி என்று அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொடுத்து அவர்களின் அறிவையும் ஆற்றலையும் பெருக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டமே திண்ணை. திண்ணையின் அவசியம் குறித்து திரு. சகாயம் IAS அவர்கள். உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களை மொழித்திறன், செயற்திறன் மற்றும் பொது அறிவிலும் மெருகேற்றி போட்டித்தேர்வுகளையும், அரசுத் தேர்வுகளையும் தன்னம்பிக்கையுடன் அணுக வைக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திண்ணை வகுப்புகள் மக்கள் பாதை தன்னார்வலர்கள் மூலம் செயல்பட்டு வருகின்றது. சுமார் 200 திண்ணை வகுப்புகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 100 வகுப்புகளுக்கு மேல் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. உங்கள் ஊரிலோ, நகரிலோ திண்ணை வகுப்பு ஆரம்பிக்க விருப்பமா: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க விருப்பமுள்ளவரா நீங்கள் ? எங்களுடன் தன்னார்வலராக இணைந்து செயல்பட தொடர்பு கொள்ளவும், திரு. வில்லியப்பன் – 98407 76135

குருதி

இன்றைய நவீன யுகத்தில் மருத்துவ மனைகளும் அதில் வசதிகளும் பலவாறாக பெருகிவிட்டது, எனினும், அவசர காலங்களில் வசதியற்ற மக்களுக்கு இரத்தம் எளிதாக கிடைப்பதில்லை, எனவே, இரத்தம் தேவைப்படும்போது மட்டும், தன்னார்வலர்கள் மூலம் நேரடியாக இரத்தம் வழங்கி, காலத்தினால் செய்த உதவியாய், உதிரம் கொடுத்து உயிரைக் காக்க, உருவாக்கப்பட்டதே குருதி. இரத்ததானத்தின் தேவைகள்: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள்.ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை. ஒரு கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம். இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்: இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு. இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள் இரத்த தானம் செய்பவரின் வயது 18-60 குள் இருத்தல் அவசியம். இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள். இரத்தக் கொடை கொடுக்க விரும்புவரா ? பொத்தானை அழுத்தி மக்கள் பாதை செயலியை (app) பதிவிறக்கம் செய்யவும். உங்கள் தகவலை இரத்த குறிப்பு உட்பட தன்னார்வலர் படிவத்தில் பூர்த்தி செய்யவும். இரத்தம் தேவைப்படுவோர், இந்த app மூலம் உங்களை தொடர்பு கொள்வர். இரத்த தேவையா ? பொத்தானை அழுத்தி மக்கள் பாதை செயலியை (app) பதிவிறக்கம் செய்யவும். இரத்தத் தேவை இருக்கும் அஞ்சல் குறியீடு எண் மற்றும் இரத்த வகையை(blood group) செயலியில்(app) பதிவிட்டு தேடவும். உங்கள் பகுதியில் இரத்தக் கொடையாளர்களின் தகவல்களை தொலைபேசி எண்ணுடன் பெறலாம். தொடர்புக்கு: ப்ரவீன் – 98400 86580