#சென்னை – நேர்மை ஓட்டம் 2019

  மக்கள் பாதை நடத்தும் நேர்மை தேர்தல் ஓட்டம் 2019 மினி மாரத்தான் நடைபெறயுள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நேர்மையாகவும், கண்ணியமாகவும், 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறயுள்ளது. எனவே கல்லூரி மாணவ, மாணவிகள்  சமூக ஆர்வலர்கள் மக்கள் பாதை தன்னார்வலர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.. இடம் : பெசன்ட் நகர், கடற்கரை, சென்னை. நாள் : 14.04.2019, ஞாயிற்றுக்கிழமை நேரம் : Continue Reading

# சென்னை – (wwe)மல்யுத்தம் பயற்சி வகுப்பு

வணக்கம் நமது நேர்மையாளர் திரு.உ.சகாயம் ஐயா அவர்களின் வழிகாட்டுதலில், மக்கள் பாதை திடல் திட்டம் மூலம், தமிழகத்தில் முதல் முறையாக தொழில்முறை மல்யுத்த (WWE Pro Wrestling) சென்னை மாவட்டத்தில் பயிற்சி அளிக்கபட இருக்கிறது .. தொடர்புக்கு கஸ்மீர் சகாய ராஜா.பீ ☎9488193073  

#சென்னை -பாதுகாப்பு நுணுக்க பயிற்சிகள் வழங்கப்படும்…

👮 👮 👮 👮 👮 👮 👮 *வணக்கம்* *(Bodyguards Training Camp)* *நமது நேர்மையாளர் திரு.உ.சகாயம் ஐயா அவர்களின் வழிகாட்டுதலில் மக்கள்பாதை திடல் திட்டம் மூலம் பாதுகாப்பு நுணுக்க பயிற்சிகள் அளிக்கபட்டு இளைஞர்களுக்கு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் வேலைகள் ஏற்பாடு செய்யப்படும்.மற்றும் இராணுவம் காவல்துறையில் சேர விரும்புவோர்க்கும் இந்த பயிற்சி வழங்கப்படும்…* *தொடர்புக்கு* *கஸ்மீர் சகாய ராஜா.பீ* *☎9488193073* *🙏நன்றி🙏* 👮 👮 👮 👮 👮 Continue Reading

#சிங்கப்பூர் – கலந்தாய்வு கூட்டம்

சிங்கப்பூரில் மக்கள் பாதை சார்பாக மாதந்திர கலந்தாய்வு கூட்டம் தேக்கா நகரில் நடைபெற்றது. கூட்டத்தின் சிறப்பம்சங்கள்: “திட்ட விளக்கம்” “நேர்மையான தேர்தல் 2019” விழிப்புணர்வு. சிங்கப்பூரில் கலப்பை திட்டம். தமிழ் மாத விழாவில் பங்கேற்பு. கம்பன் தமிழ் மன்றத்தில் இணைதல். கைத்தறி விற்பனையும் நடைபெற்றது.

#கோவை- நேர்மை தேர்தல் விழிப்புணர்வு

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகர மக்கள் பாதை சார்பாக ஊஞ்சவேலாம்பட்டி சந்தை , பொள்ளாச்சி ரயில் நிலையம் மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தி நேர்மை தேர்தல் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது.  

#விருதுநகர் – நேர்மை தேர்தல் உறுதிமொழி

அனைவருக்கும் வணக்கம் நேர்மை தேர்தல் 2019 என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற முழக்கத்தை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 25 மக்கள் பாதை நண்பர்கள் தங்களது இணைய வழியாக (பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்) பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள்.  

#திருவள்ளூர் – நேர்மை தேர்தல் விழிப்புணர்வு கூட்டம்

24.03.2019 அன்று திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் மாவட்ட மகளிர் அமைப்பு சார்பாக திருமதி. விக்டோரியா அவர்கள் தலைமையில் மகளிருக்கான நேர்மை தேர்தல் விழிப்புணர்வு செய்யப்பட்டது. – திருவள்ளூர் மாவட்ட மக்கள் பாதை  

#மதுரை – நேர்மை தேர்தல் விழிப்புணர்வு தெரு முனை கூட்டம்

நேற்று 24-3-2019 ஞாயிறு மதுரை அனுப்பானடி தாய் நகர் பகுதியில் மகளிர் தின நிகழ்வு, சமூக விழிப்புணர்வு மற்றும் நேர்மை தேர்தல் 2019 தொடர்பான தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.. கூட்டத்தில் சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டனர்..

#திருவண்ணாமலை – நேர்மை ஐஏஎஸ் அகாடமி திறப்பு விழா மற்றும் மக்கள் பாதை அலுவலகம் திறப்பு விழா

அனைவருக்கும் வணக்கம். உயர்திரு உ.சகாயம் இஆப அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் மக்கள் பாதை இயக்கம் சார்பில் வேலூர்மண்டலம் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் பகுதியில் 23.03.19 இன்று காலை 10 மணிக்கு #மலைவாழ் மக்களின் கல்விநிலை மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் நேர்மை ஐஏஎஸ் அகாடமி திறப்பு விழா மற்றும் மக்கள் பாதை அலுவலகம் திறப்பு விழா, கிராமங்களில் கிளை திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.