நமக்கு உணவளித்து உயிர்கொடுக்கும் உழவனுக்கு வாழ்வில்லை- வளமில்லை. கருகிப்போன சாகுபடியும் கடன் தொல்லை நெருக்கடியும் உழவர்களை தற்கொலைக்குத் தள்ளுகின்றன, சவக்குழியில் சாய்க்கின்றன. கிராமங்களின் நாட்டிலே உழவர்களின் வேதனைச் சாவு சமூக அவமானத்தின் உச்சம். எனவே, மக்கள்பாதை இத்திட்டத்தின் மூலம் எளிய உழவர்களுக்கு கைக்கொடுக்க எண்ணுகிறது, உழவர்களின் விளைப்பொருட்களை  நேரடியாக கொள்முதல் செய்கிறது.  பெருநகரங்களில் அங்காடி அமைத்து அவைகளை விற்பனை செய்கிறது.  இதன் மூலம் விற்று பெருகின்ற இலாபம் முழுமையும் உழவர்களுக்கேத் திருப்பிகொடுத்து அவர்கள் வாழ்வு மேம்பட உதவக் கூடிய திட்டம் இது.

இந்தத் திட்டத்திற்கு நீங்கள் பங்களிக்க விருப்பமா:

எங்களுடன் தன்னார்வலராக இணைந்து செயல்பட தொடர்பு கொள்ளவும்,

திரு. ரவி – 99419 01919
திரு. இராஜ்குமார் – 9445161751