கொடைகளில் சிறந்தது உயிர்க்காக்கும் குருதி ( இரத்தம் ) கொடையே. அவசரக்காலத்தில்  குருதி கொடுத்து அரிய உயிரைக் காப்பது தான் அறத்தின் உச்சம்.  கண் மற்றும் இதர உறுப்புக்கொடை கொடுப்பதை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின்  உள்ளடக்கம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொடை களத்தில் உள்ளப் பரிவோடு உறுதியாக நிற்கிறார்கள் என்பது தான் கொடையின் உன்னதத்தின் உச்சி.

இரத்ததானத்தின் தேவைகள்:

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள்.
ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.
ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை.
ஒரு கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் தேவைப்படலாம்.


இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்:

இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.
தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு.
இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது.
இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.


இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்

இரத்த தானம் செய்பவரின் வயது 18-60 குள் இருத்தல் அவசியம்.
இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.


இரத்தக் கொடை கொடுக்க விரும்புவரா ?

பொத்தானை அழுத்தி மக்கள் பாதை செயலியை (app) பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் தகவலை இரத்த குறிப்பு உட்பட தன்னார்வலர் படிவத்தில் பூர்த்தி செய்யவும்.
இரத்தம் தேவைப்படுவோர், இந்த app மூலம் உங்களை தொடர்பு கொள்வர்.


இரத்த தேவையா ?

பொத்தானை அழுத்தி மக்கள் பாதை செயலியை (app) பதிவிறக்கம் செய்யவும்.

இரத்தத் தேவை இருக்கும் அஞ்சல் குறியீடு எண் மற்றும் இரத்த வகையை(blood group) செயலியில்(app) பதிவிட்டு தேடவும்.
உங்கள் பகுதியில் இரத்தக் கொடையாளர்களின் தகவல்களை தொலைபேசி எண்ணுடன் பெறலாம்.


தொடர்புக்கு:
திரு. ப்ரவீன் – 98400 86580