மானுட சமூகத்திற்கு ஆடை அளித்து அழகு சேர்த்த நெசவுக்குடிகள் இன்று வறுமையிலும் வெறுமையிலும் வாடுகின்ற நிலை. பளபளக்கும் துணி அளித்தவர், பட்டினியால் பரிதவிக்கும்  பரிதாப நிலை. ஆலைகளின் வரவால் வஞ்சிக்கப்பட்டவர்களாய், கஞ்சிதொட்டியே கடைசி நம்பிக்கையாய் எஞ்சியிருக்கும் நெசவாளர்கள் இவர்கள். எனவே, ஏழைகைத்தறி நெசவாளர்களின் வருவாய் உயர்த்திட அவர்கள் நெய்கின்ற ஆடைகளை பெருநகரங்களில் விற்றுகொடுத்து இலாபம் முழுமையும் நெசவாளர்களுக்கு திருப்பிகொடுத்து அவர்களின்  வாழ்வில் ஒளியேற்ற வந்த உன்னதத் திட்டம் இது.


விசைத்தறியில் உருவாக்கப்பட்ட துணி புகைப்படக் கருவியில் எடுக்கப்பட்ட படம் போல, ஆனால் கைத்தறியில் நெய்யப்பட்ட துணியோ கற்பனையில் வரைந்த ஓவியம் ஆகும்.

நெசவாளர்களின் இன்றைய நிலை குறித்து திரு. சகாயம் IAS அவர்களின் கருத்து.


இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, பொறுப்பாளர் கூறுகையில்.


இந்த விற்பனை மூலம் கிடைத்து வரும் வருவாயை பயனாளிகளுக்கு, நேரடியாக கொண்டு சேர்த்தும் வருகிறோம்.


இதுவரை சுமார் 5000 கைத்தறி ஆடைகளைத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்துள்ளோம். வருவாயை பயனாளிகளுக்கு, நேரடியாக கொண்டு சேர்த்தும் வருகிறோம்.


கொள்முதல் செய்த ஆடைகள்:

சேலை, வேட்டி, துண்டு, போர்வை, கைலி.
இந்த விற்பனை மூலம் கிடைத்து வரும் வருவாயை பயனாளிகளுக்கு, நேரடியாக கொண்டு சேர்த்தும் வருகிறோம்.

கைத்தறி ஆடைகள் வாங்கி ஏழை நெசவாளர்களுக்கு உதவ தொடர்பு கொள்ளவும்,
திரு. சண்முகம் – 99622 87307