இன்றைய தமிழக இளைஞர்கள் , போதைக்கும் மதுவுக்கும் பொழுதெல்லாம் அடிமையாகி, வாழ்வை இழப்பதும், வதங்கி தவிப்பதும் அன்றாட நிலை. இந்த இளைஞர்களின் உடலாற்றலை வெளிக்கொணர, உலகக் களத்தில் இவர்கள் வெற்றியை பெற, பல்வேறு விளையாட்டுகளில் பாங்காக பயிற்சியளிக்க உருவாகப்பட்ட திட்டம் இது. எம் திடல் உள்ளூரில் தொடங்கி ஒலிம்பிக் வரை நீளும் என்பதே நிசம்.

நமது மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்த விழுப்புரம் அந்தோணியம்மாள், சர்வதேச கடற்கரை கபடி (மகளிர் ) போட்டியில் இந்திய அணி சார்பில் 19-03-2017 அன்று தங்கம் வென்றுள்ளார்.


மக்கள் பாதையின் சிலம்பம் பயிற்சி மூலம் இலத்துவாடி( நாமக்கல்) அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வு!

உங்கள் ஊரிலோ, நகரிலோ திறமையான வீரர்கள் இருக்கிறார்களா ?
நீங்கள் ஒரு பயிற்சியாளரா ?

அப்படியென்றால் தொடர்பு கொள்ளுங்கள்!
திரு. பஷீர் +91 98841 04477