அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வியின்மை , நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு நாளும் எதிரானது ;  இங்கே கல்வி கற்பிக்கும் மொழியிலும் – வழியிலும், தரத்திலும் – திறத்திலும் அப்பப்பா எத்தனை வெளிப்பாடு ! எத்தனை வேறுபாடு. நாட்டின் ஆதாரமான ஊரகப்பகுதியில் ஏழை மாணவர்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கும் பெருந்துன்பம். இவர்களிடையே  தனியார்பள்ளிகளுக்கு நிகரானத் தகுதியை வளர்ப்பதற்கு குறிப்பாக, ஆங்கிலத்தையும் அறிவியலையும் வலுவாக சொல்லிக்கொடுக்க வரமாக வந்த திட்டம் திண்ணைத் திட்டம்.பள்ளிப்பாடத்தோடு இயற்கையை நேசிக்கும் இனியோராய் நீதியை நிலைநாட்டும்  நேர்மையாளராய் இம்மாணவர்களை வளர்த்தெடுக்க திண்ணை களம் அமைக்கும்.

திண்ணையின் அவசியம் குறித்து திரு. சகாயம் IAS அவர்கள்.

உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களை மொழித்திறன், செயற்திறன் மற்றும் பொது அறிவிலும் மெருகேற்றி போட்டித்தேர்வுகளையும், அரசுத் தேர்வுகளையும் தன்னம்பிக்கையுடன் அணுக வைக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திண்ணை வகுப்புகள் மக்கள் பாதை தன்னார்வலர்கள் மூலம் செயல்பட்டு வருகின்றது.

சுமார் 200 திண்ணை வகுப்புகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன.


விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 100 வகுப்புகளுக்கு மேல் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

உங்கள் ஊரிலோ, நகரிலோ திண்ணை வகுப்பு ஆரம்பிக்க விருப்பமா:


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க விருப்பமுள்ளவரா நீங்கள் ?
எங்களுடன் தன்னார்வலராக இணைந்து செயல்பட தொடர்பு கொள்ளவும்,
திரு. அப்துல்  நாசர்+91 98841 98593