அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும்  வணிகர்களின் கையில் மருத்துவம் மட்டும் என்ன விதிவிலக்கா ? எளியோருக்கு மருத்துவ வசதி எட்டாக் கனி ! மருந்தின் விலையோ இமயத்தின் நுனி ! பரிதாபம் எளியோர்கள். நலம் இவர்களுக்கு கருணை கரம் நீட்ட எத்தணிக்கிறது. விளைவு தமிழ் நிலமெங்கும் மக்கள் மருந்தகம் மலர்ந்திருக்கிறது.இன்று அவர்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள். எளியோர் அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை எம் இறுதி இலக்கு. மேலும் நமது மரபு வழி  மருத்துவத்தை மக்களுக்கு கொண்டு செல்லுகின்ற கொள்கையும் இங்கு உண்டு.

ஜெனிரிக் மெடிசின் (Generic Medicine) என்றால் என்ன ?

சிவகங்கையில் மக்கள் மருந்தகம்:

தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் மருந்துக் கடைகள்:

வ.எண் இடம் தொடர்புக்கு
1. சிவகங்கை 9788052839, 04575240007
2. கன்னியாகுமரி 8903114050
3. திருச்சி 8903600862
4. கோவை 9842263302
5. வேலூர் 8098888844

புதிதாக கடை திறக்கப்பட உள்ள இடங்கள்:

வ.எண் இடம் தொடர்புக்கு
1. பெரம்பலூர் 9994567301
2. தூத்துக்குடி 8015915499, 04639281084
3. திண்டுக்கல் 9842143750
4. காஞ்சிபுரம் 9445230330
5. சிவகங்கை காளையார்கோவில் 9786830662
6. சிவகங்கை மானாமதுரை 9043188480
7. ராமநாதபுரம் கீழக்கரை 9791742074
8. ராமநாதபுரம் ஏர்வாடி 9943942097
9. ராமநாதபுரம் கடலடி 7200548348
10. சேலம் 9600455443
11. நாமக்கல் 9043000044

தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள மருந்தகங்கள்: Click here

மருந்து வாங்குவதற்கான வழிமுறைகள் :

1. நேரிடையாக வாங்குதல்.
மருந்து அட்டையின் தெளிவாக புகைப்படம்(இரு புறங்களும்) , மருத்துவரின் மருந்து சீட்டு
ஆகியவற்றை வாட்சப்( 9788052839) அல்லது மின்னஞ்சல் (svgjanaushadhi@gmail.com) அனுப்புதல் .

2. வங்கி கணக்கில் பணம் செலுத்திய பிறகு மருந்தை கொரியர் மூலம் பெறுதல்.

3. பணம் செலுத்தும் முறை:
Online Net banking, வங்கி மற்றும் அஞ்சலகத்தில் செலுத்துதல், காசோலை(Cheque) அனுப்புதல், BHIM APP மூலம் செலுத்துதல்.


தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் “மக்கள் மருந்தகம்” துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு:

தொடர்புக்கு மாவட்டம்
திரு. ரவி 9087868796 காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி.
திரு. காளீஸ்வரன் 8608601443 மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை.
திரு. ஜீவா 9965152053 ஈரோடு, கோவை, திருப்பூர், உதகை.
திரு. ஜெபா 9486813973 திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகபட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர்.
திரு. ராதாகிருஷ்ணன் 9345183478 சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்.
திரு. மீரான் 9020435409 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, விருதுநகர்.

மக்கள் பாதையின் மக்கள் மருந்தகம் புதிதாக தொடங்குவதற்கான வழிமுறைகள்:

1.பின்வரும் விண்ணப்ப படிவத்தை(Download) பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்து அதனுடன் ஆதார் நகல், பான் கார்ட் நகல் இணைத்து சுய விலாசம் இட்டு 114/1, முதல் மாடி, மதுரை ரோடு, சிவகங்கை – 630561 (ஜஸ்டின் பள்ளி எதிர்புறம்) 9788052839,04575240007 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

2.தங்கள் விண்ணப்பத்திற்கு மத்திய அரசின் அனுமதி பெற்று தங்களின் மின்னஞ்சலுக்கு தெரிவிக்கப்படும். தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் தமிழக அரசின் மருந்து உரிமம் (DRUG LINCENCE) பெறவேண்டும். இல்லையேல், அனுமதி காலாவதி ஆகிவிடும்.

3.மருந்து உரிமம் விண்ணப்பிற்பதற்கு முன் பின்வருவனவற்றை தயார் நிலையில் வைக்கவும்.

 • 3.1.கடை அளவு குறைந்தபட்சம் 110 சதுர அடி( 60 மாத ஒப்பந்தத்துடன்.)
 • 3.2.காற்றுச்சீரமைப்பி(A/C) 1.5 T, குளிர்சாதன பெட்டி(Fridge) 180LIT (புதியது அல்லது வேலை செய்யும் நிலையில் இருந்தாலும் போதும்).
 • 3.3.கணினி(Computer), அச்சுப்பொறி(Printer), தடையில்லா மின்சாரம்(UPS)
 • 3.4.மருந்தகம் சான்றிதழ் (Pharmacy Certificate)
 • 3.5. மருந்து கடையின் BLUE PRINT PLAN
 • 3.6. இரண்டு புகைப்படம் (உரிமையாளர்)
 • 3.7.நான்கு உடன்படிக்கை ( மருந்தாளுநர் மனப்பூர்வ உறுதிமொழி 20ரூபாய் பத்திரம், சட்டபூர்வ குடியிருப்பவர் உறுதிமொழி 20ரூபாய் பத்திரம் மற்றும் வாடகை உடன்படிக்கை பத்திரம் 20ரூபாய் பத்திரம், மத்திய அரசின் தனிநபர் உடன்பாடு 100ரூபாய் பத்திரம்). பதிவிறக்கம் செய்ய -> https://drive.google.com/drive/folders/0B7ed2DMIaQaRd1RrWDFlZUJreUE?usp=sharing
 • 3.8. வரி அடையாள எண்(TIN Number)
 • 3.9.வங்கியில் நடப்பு கணக்கு (Current Account).
 • 3.10.மருந்தாளுனரின் சான்றிதழ்(Pharmacist Certificate)
 • 3.11.ஆதார் அட்டை(Adhaar Card)
 • 3.12.நிரந்தர கணக்கு எண்(PAN Number)

கடையின் உட்புற வேலைகளுக்கு( INTERIOR WORK) தனியார் மருந்து கடையை கவனத்தில் கொள்ளவும். உடன்படிக்கை பத்திரங்கள் அனைத்தும் PRADHAN MANTRI BHARATIYA JAN AUSHADHI KENDRA என்ற பெயரில் வாங்கவும். மூன்றிலும், NOTARY PUBLIC இடம் கையெழுத்து வாங்கவேண்டும், மற்றும் கடையின் BLUE PRINT PLAN பதிவுபெற்ற கட்டிட பொறியாளரிடம் பெறவேண்டும்,

4.தங்கள் கடை எந்த மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வருகிறது என்பதை தெரிந்துகொள்ள www.drugscontrol.tn.gov.in என்ற வலைத்தளத்தை பார்க்கவும். இங்கு அனைத்து மாவட்டங்களுக்கான அலுவலகத்தின்: தொலைபேசி எண்கள் மற்றும் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

5. உங்கள் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு சென்று மருந்து உரிமத்துக்கான விண்ணப்படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அதனுடன் 3 உடன்படிக்கை பத்திரம்,BLUE PRINT, 3000ரூபாய்க்கு வரைவோலை(தங்கள் மக்கள் மருந்தகத்திற்கு உட்பட்ட மருந்து கட்டுபாட்டு அலுவலக பெயரில் எடுக்கவேண்டும்), 2 புகைப்பட அடையாள சான்று, ஒரு அஞ்சல் உறை தங்களின் மருந்தகத்தின் முகவரியிட்டு (50ரூபாய் அஞ்சல் தலை ), 2+2 Court Stamp பை படிவம் 19ல் ஒட்டவேண்டும். மருந்து கட்டுபாட்டு அலுவலகத்தில் நேரடியாகவோ, அல்லது பதிவு தபால் முலமாகவோ அனுப்பலாம். மேலும், விவரங்களுக்கு மருந்து உரிமத்துக்கான விண்ணப்படிவத்தை பார்க்கவும்.

6. அனுப்பிய 10 நாட்களுக்குள் தங்களின் மருந்தகத்திற்கு மருந்து ஆய்வாளர் அவர்கள் வந்து விசாரணை செய்து தங்களுக்கு மருந்தகம் நடத்த உரிமம் கொடுப்பார்கள் (மேலும் தகவல்களுக்கு 9788052839).

7.அனுமதி கிடைத்தவுடன் அதன் நகல், ஆதார் நகல், பான்கார்ட் நகல் , மருந்தாளுனரின் சான்றிதழ் நகல், BLUE PRINT நகல் மற்றும் மத்திய அரசின் தனிநபர் உடன்பாடு (100ரூபாய் பத்திரத்தில் பூர்த்தி செய்து ) மேல் கூறிய சிவகங்கை மக்கள் மருந்தகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.

8. தாங்கள் அனுப்பிய படிவத்தை மத்திய அரசிற்கு அனுப்பி இறுதி அனுமதி பெற்றுத்தரப்படும். அனுமதி வந்தவுடன் தாங்கள் மத்திய அரசின் விலை மலிவான தரமான மருந்துகளை வாங்கி மக்களுக்கு சேவை செய்யலாம். மருந்து வாங்குவதற்க்கு ஒரு மாத காலம் கடன் பெற்றுகொள்ளலாம், இதற்கு முன், மருந்துகள் பற்றிய தகவல்களுக்கும் மற்றும் இதன் லாபம் தொடர்பாக அறிய http://janaushadhi.gov.in என்ற வலைத்தளத்தை பார்க்கவும்.

மேலும் தகவல்களுக்கு: திரு. கண்ணன் 9788052839, Mail ID: svgjanaushadhi@gmail.com